படிந்த நினைவுகள் : தினப்பொழுது
மனதில் துளித்துளியாய்ச் சேரும் கடந்த நிமிடங்கள்
Wednesday, January 22, 2014
புத்தக லிஸ்ட் 2014
புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்.:
பழைய புத்தகங்கள்
- ஈரான் 1 & 2 மர்ஜானே சத்ரபி விடியல்
- மாயாவி இளவரசன் , விசாகன் , வானதி
- வயலின் வசந்தா, சாந்தா மூர்த்தி , வானதி
- மூளைக்கு வேளை , வாண்டு மாமா, வானதி
- விந்தை வினோதம் விசித்திரம், வாண்டு மாமா, வானதி
- மழைகாலமும் குயிலோசையும், மா.கிருஷ்ணன், காலச்சுவடு
- கலையை ரசித்தல் , ஒக்ககூரா காக்குஜோ, வ உ சி பதிப்பகம்
- எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, பஷீர், வ உ சி நூகலகம்
- அக்கடா, எஸ்.ராமகிருஷ்ணன், வம்சி
- மூன்றாம்பிறை, கே.வி.ஷைலஜா, வம்சி
- வெண்கடல், ஜெயமோகன், வம்சி
- நீர்யானை முடியுடன் இருந்தபோது, NBT
- காடு, ஜெயமோகன், தமிழினி
- இன்றைய காந்தி, ஜெயமோகன், தமிழினி
- வாழ்வின் சில உன்னதங்கள், விட்டல் ராவ், நர்மதா
- யானை காணாமலாகிறது, ஹருகி முரகாமி, மலைகள் பதிப்பகம்
- லங்காபுரி ராஜா, பிரமிள், லயம் வெளியீடு
- சித்திரக்கதைகள், நிகோலஸ் ராத்ரோவ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- ரஷ்ய புரட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி? அனதோலி தொமீல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- விளையாட்டுப் பிள்ளைகள், நிக்கலாய் நோரசவ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- லயன் காமிக்ஸ் புத்தகங்கள்
பழைய புத்தகங்கள்
- மனவாசம் , கவிஞர் கண்ணதாசன்
- மூவரை வென்றான், நா. பார்த்த சாரதி
- பொன்னி காமிக்ஸ் - ஏர்போர்டில் மாயாவி, இன்னும் சில
- ஒருசில பழைய மாத இதழ்கள்
Tuesday, January 21, 2014
2014 சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2
வம்சி புக்ஸ் கடையில் "வெண்கடல்" "மூன்றாம் பிறை" "கதை நேரம் (குறுந்தகடு) மூன்றும் உடனடியாகக் கிடைத்தன. பணம் செலுத்துமிடத்தில் அமர்ந்திருந்த பெண்மணி அவர்களைப் பார்த்து மையமாக சிரித்துவிட்டு அவர்களை எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று வெளியே வரும்வரை யோசித்துக் கொண்டே வந்தேன். வீட்டிற்கு வந்து மூன்றாம் பிறை புத்தகத்தைப் புரட்டிய போது அவர்களே (K.V. ஷைலஜா) பின்னட்டையில் இருந்தார்கள். கொஞ்சம் முன்பே பார்த்திருந்தால் அவர்களிடம் சில வார்த்தைகளாவது பேசிவிட்டு புத்தகத்தில் கையெழுத்து வாங்கி இருக்கலாம். ஒரு எழுத்தாளரிடம் முதன் முறையாக அளவளாவும் சந்தர்ப்பத்தை விட்டாயிற்று. :(
விடியல் பதிப்பகத்திற்கு அவரசரமாக ஓடி ஈரான் 1 & 2 (Persepolis) பிரதிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு நிறைய இருக்கிறது என்று எடுத்து கொடுத்தார்கள். நான் அவர்களிடம் , போனவருடம் இந்த புத்தகத்தைக் கேட்ட பொழுது கொண்டு வந்த பிரதிகள் காலியாகி விட்டது என்று சொன்னதினால் கொஞ்சம் சந்தேகத்துடனே வந்தேன் என்று சொன்னேன். கடையிலிருந்த சிப்பந்தி கிடங்கில் நிறைய இருப்பதாகவும் யாரும் அதிகம் வாங்குவதில்லை என்றும் சொன்னார். புத்தகப் பதிப்பு பிரமாதென்பதும், ஈரான் என்கிற தலைப்பே மக்கள் ஆர்வம் காட்டாதற்கு காரணமா இருக்கலாமென்பதும் ரகுவின் அபிப்பிராயம். இது இப்படி இருக்கும் போது, வாங்குகின்ற சில வாசகர்களிடமும் பதிப்பு விலை ரூ70க்கு பதிலாக ரூ 100 என்று ஒட்டி விற்பது நியாயமா?
ஆனால் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் வானதி பதிப்பகத்தில் வாங்கிய வாண்டுமாமா,விசாகன் போன்றவர்களின் புத்தகங்கள் பதிப்பிக்கபட்டு இருந்த போது போட்ட விலையிலேயெ கிடைத்தன(முதற்பதிப்பு). வாழ்க வானதி.
உயிர்மையில் வாங்க நினைத்திருந்த "ஆது அந்தக் காலம்" "புரூஸ்லீ- சண்டையிடாத வீரன்" இரண்டு புத்தகங்களும் பணப்பை இளைத்ததாலும், கைப்பெட்டி கனத்ததாலும் அடுத்த வருடத்திற்கு ஒத்திப் போடப்பட்டுள்ளன.
கால் களைத்துப் போய் பசி வயிற்றைப் பிடுங்கியதால் சாகித்ய அகெடமி மற்றும் சில பதிப்பகங்களைப் பார்க்காமலே கிளம்ப வேண்டியதாயிற்று. திரும்பி வரும் போது,எனக்காகவே புத்தகக் கண்காட்சிக்கு கூட வந்த அக்கா கணவரும் , பதிவுலகத்தில் பிரபலமான லிச்சி ஜூஸ் குடித்து விட்டு நடையைக் கட்டினோம்.
சென்னையில் ஆட்டோவில் செல்ல, இல்லாத சொத்தையும் எழுதிக்குடுத்துவிடக் கேட்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மத்தியில் நந்தனம் கண்காட்சியிலிருந்து நங்கநல்லூர் வரை மீட்ட்ர் போட்டு மேலே பத்து ரூபாயைக் கூட சின்னக் குரலில் தயக்கத்துடனே கேட்ட ஒரு ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்தார். ஒரு நினைவுக்கு அவரையும் ஆட்டோவையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
பின்குறிப்பு:
எதோ ஒருநாள் சம்பவத்தை கோர்வையாக எழுத நினைத்து பேனாவை எடுப்பதற்குள்ளாகவே கண்கள் இருட்டிக் கொண்டு வந்து மண்டை சூடாகி தலை வலி வந்து விட்டது. தட்டு தடுமாறி ஒருவழியாக எழுதி முடிப்பதற்குள்ளாகவே தாங்கமுடியாத பிரசவ வேதனை என்பார்களே அது போன்ற அவஸ்தை பட்டாயிற்று. ஜெயமோகன் தினமும் ஒரு பகுதியாக தொடந்து 10 ஆண்டுகள் மகாபாரதம் எழுதுகிறாரே. அவர் காலில்விழுந்து கும்பிட வேண்டும் இருக்கிறது. அவர் வேகம் ஒரு அசுர வேகம்.
அவரின் வெண்கடல் முதல் கட்டுரையை பாதி படித்து விட்டு நிறுத்தி விட்டேன். இது வரை படித்ததிலேயே அமிழ்ந்து போய் கிடக்க வேண்டும் போல் தோன்றுகிறது.
இந்த வருடம் படிக்க ஆரம்பித்த சில புத்தகங்களினாலேயே என் வேக வாசிப்பு மாறி விட்டது. கதையை தேடி ஓடிய என் மனத்தை "வெண்கடல்" ஆழ் அனுபவங்களைச் சுவைக்க இழுக்கிறது.
2014 சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 1
முன்குறிப்பு :
'உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக" என்று வர்ணிக்கப்பட வேண்டிய அளவில், வரலாற்றிலேயே முதன் முறையாக நான் பார்த்த முதல் புத்தகக் கண்காட்சி (சென்னை 2013) , என் உடல் பொருள், ஆவி இன்னும் பிற எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டதனால், இருக்கும் சமுத்திர தண்ணீரையெல்லாம் ஒரு அரை லிட்டர் பெப்ஸி பாட்டிலில் அடைப்பது போல ஒரே நாளில் சுமார் 800 கடைகளைச் சுற்றிப் பார்த்த ஆவேச வெள்ளத்தில் ஒரு பெட்டி, ஒரு பெரிய கட்டைப்பை நிறைய புத்தகங்களுடன் ஹைதராபாத் வந்து சேர்ந்தேன்.
--------------
மார்கழி ஆரம்பிப்பதற்குள்ளாகவே அடுத்த புத்தகக் கண்காட்சி ஜுரம் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. சரியாக டிசம்பர் 15 அன்றே மனம் பித்துப் பிடித்த குரங்காக, இணயத்தில் புத்தகப் பரிந்துரை பட்டியல்களுக்காகவும் வேறு புத்தக விபரங்களுக்காகவும் தாவ ஆரம்பித்தது. முன் அனுபவம் கை கொடுக்கும் என்று சும்மாவா சொல்லினார்கள். போன முறை கிடைத்த பளு தூக்கும் சோதனைக்குப் பிறகு, வாங்க வேண்டிய புத்தகங்களைத் தீர்மானிக்கும் முன்பே எடுத்து செல்ல வேண்டிய ட்ராலி பெட்டியைச் சுத்தம் செய்து வைத்து விட்டேன். புத்தகக் கண்காட்சிக்கு பெட்டியக் கொண்டு போய் புத்தகம் வாங்கின ஆள் நானாகத்தான் இருக்கும். :). திரும்பி வரும் போது வரும்போது ஒருவர் 'இங்க பாரு, பொட்டியெல்லாம் கொண்டு வந்திருக்காங்க" என்று சொல்ல, மனதில் ஒரு அல்ப சந்தோஷம் எட்டிப் பார்த்து 'ஏய் பூர்ணி...எப்டில்லாம் யோசிச்சிருக்க பாரு ...எங்கியோஓஓஓஓஒன் போய்ட்டெ' என்று சொல்லிவிட்டுப் போனது.
நுழைவுச்சீட்டு வாங்க போவதற்குள்ளாகவே திருஷ்டிப் பரிகாரமாக முதலில் கம்பளம் தடுக்கி விழுந்து மெல்ல எழுந்திருத்து வாசலில் குடுத்த தம்மாத்தூண்டு பொங்கலை ஒரே வாயில் போட்டு விட்டு விடு ஜூட் உள்ளே. முதலில் ஓடி கர்ச்சீப் போட்ட லயன் காமிக்ஸ் கடையில், இருக்கும் புத்தகங்களை பில் போடும் போது இன்னும் சில புத்தகங்கள் தீர்ந்து போச்சு என்று கடைக்காரர் பொறாமைத்தீயை பத்த வைத்து விட்டார். அம்மாடி லக்கி புத்தகங்கள் எல்லாம் கிடைத்ததே என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பொட்டி, பட்டியல் சகிதம் ஆட்டம் சூடு பிடித்தது.
ஒரு மாதமாக தயாரித்துக் கொண்டு போன பட்டியலின் திருத்திய சுருக்கிய எண்ணிக்கைக்கும் மேலாகவே புத்தகங்களை வாங்கினேன். ( ஹூம். என்னிக்கெல்லாம் பட்டியல்ல இருக்கற பொருள் மட்டும் வாங்கியிருக்கோம் இப்போ மட்டும் திருந்த :-). ) கையில் கேமிராவும் கொண்டு போயிருந்ததால் சகட்டு மேனிக்கு கிளிக்கியும் தள்ளியாயிற்று.
பனுவல்-ல் ஹருகி முரகாமி பெயர் கண்ணில் பட்டு ஆர்வமாக உள்ளே நுழைந்து எடுத்த போது கடையிலிருந்த ஒருவர் என் கையிலிருந்த பட்டியலைப் ஒரு தரம் பார்த்துவிட்டு, எங்கோ ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த "லங்காபுரி ராஜா" வை என்னிடம் நீட்டி மேடம் இதுவும் பிரமிளோடது தான். நீங்க தேடற 'கைப்பிடியளவு கடல்' ரதி எங்கியுமே இல்ல. பாருங்க இவங்களே யாராவது அந்த புத்தகத்தை வச்சு இருந்தா மறு பதிப்பு செய்ய குடுங்க னு போட்டு இருக்காங்க என்று முடித்தார். ஹை... வாலு போச்சு கத்தி வந்தது கணக்கா லங்காபுரி ராஜா பெட்டில விழுந்துட்டார். வீட்டுக்கு வந்து புத்தகத்தோட பதிப்பு ஆண்டு பார்த்த போது விலை 15க்கு பேனாவுல எண் 1 ஐ 4 ஆக மாற்றி இருந்தது தெரிந்தது. சரீ பில் போடும் பொழுதெல்லாம் இப்படி நடந்திருக்காது என்று நானும் ஒருவழியா சமாதானம் ஆகி விட்டேன். அங்கேயே ஜெயமோகனின் 'இன்றைய காந்தி" கேட்டபோது தமிழினியில் கிடைக்கும் என்றார்கள்.
இங்கேயும் ஒரு பதிவு படிச்சா இன்னொரு பதிவு இலவசம்..... :)
சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2.....தொடரும்.....
சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2.....தொடரும்.....
Sunday, August 4, 2013
Calculated Risk
This
is called a "Calculated Risk". Try something new with out expecting
perfection in a casual day. Analyse the results. Add it to your
expertise and emerge with your best on the special day.
Kolam and Financial management in one shoot. :-) # self experience.
Added as FB status message on 04.08.2013
Friday, January 11, 2013
யார் இந்த கதாஸ்( Kadhas)?
ஒருவேளை ஒரு நாள் வீட்டிலிருந்த புத்தக குவியல்களுகிடையே இருந்த இந்த புத்தகத்தை நான் படிக்க தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம் புத்தகத்தலைப்பாக கூட இருக்கலாம். "மெட்ராஸில் மிருது யார் இந்த கொரூச்சகா? ". அட்டைப்படமும் 60-ல் வெளி வந்த விகடன் ஜோக்குகளையும் ஒரு சமயம் துப்பறியும் சாம்பு-வினையும் நினைவுபடுத்தியது.
அடுத்து வந்த முதல் கேள்வி, தமிழரான ஆசிரியர் ஏன் இந்தக்க கதையினை ஆங்கிலத்தில் எழுதி அப்புறம் தமிழாக்கம் செய்தார்.
முன்னுரையில் அரவிந்தன் "இந்தப் புத்தகத்தைப் படித்தால் உங்கள் கொரூச்சகாவும் உங்கள் நினைவுக்கு வரலாம். உங்கள் குழந்தையின் மன உலகை மேலும் துல்லியமாகப் புரிந்து கொள்ள இந்தக் கதை உங்களுக்கு உதவலாம். நவீன வாழ்க்கையும் வசதிகளும் அன்னியப் படுத்தி வைத்திருக்கும் இயற்கையின் பல்வேறு கூறுகளை உங்கள் குழந்தை உணர இந்தக் கதை துணை புரியலாம் " என்பதைப் படித்த போது எனக்கு சின்ன வயதில் இருந்த நண்பன் யாரும் என் நினைவுக்கு வரவில்லை.
பெரிதாக ஒன்றும் சுவாரசியமில்லாமல் படிக்கதொடங்கிய எனக்கு பல ஆச்சரியங்கள் கொஞ்ச நேரம் சென்றவுடன் ஏற்பட்டன. இந்தப் புத்தகத்தில் மிருதுவுக்குக் கிடைத்த "கொரூச்சகா" போல நான் அதுவரையில் ஆழ்ந்து கவனித்திராத என் மகளின் நண்பன் "கதாஸ்" கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முற்பட்டான்.
ஒரு நாள் தொலைபேசியில் பேசி க்கொண்டிருந்த மகளிடம் கேட்டதற்க்கு 'கதாஸுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றாள். என் மகள் வளர வளர கதாஸும் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனும், ஜூனியர்ஸும் நிலா விளையாடும் போது ஓடி வந்து சேர்ந்து கொள்கின்றனர். வர முடியாத நிலையில் அவள் கதாஸுடன் தொலை பேசியிலும் பேசுகிறாள். அவளிடம் கேட்டறிந்த கதாஸ் செய்திகள் மிகவும் வியப்பூட்டுபவை யாக இருக்கின்றன. கதாஸ் தற்சமயம் பெங்களூரில் இருப்பதாகவும்,போன டிசம்பரில் இங்கு வந்து அவளை பார்த்துவிட்டு ச்சென்றதாகவும் கூறினாள்.
சில சமயம் பெங்களூரில் இருப்பவன், திடீரென இங்கே வந்து மகளுடன்(நிலா) "கபூச்சு" விளையாடிவிட்டுச் சென்றதும் நடந்திருக்கிறது.
நேற்று இரவு 10.30 மணிக்கு அனைவரும் தூங்கும் சமயத்தில் கண்ணனுடனும், நிலாவுடனும் கதாஸும் சேர்ந்து கொண்டு இரவு போடும் சப்தத்தை கண்டு பிடித்து (ஸ்...... ) எனக்கு காண்பித்துக்கொடுத்தனர். :)
அவர்களின் கோட்டிங் ஷோட்டி-யில் (Ghoating -Shoti) ஒரு ஸ்கூல், ஒரு ஜூனியர்ஸ் காலேஜ் அப்புறம் ஒரு ஆபீஸும் இருக்கிறது.
புத்தகத்தில் டாப்பி, தாத்தா, அம்மணி என்ற வயதானவர்கள் மூன்று பேரும் எப்பொழுது பார்த்தாலும் மிருதுவை ஏதாவது செய்யச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
"மிருது [நிலா] கை அலம்பு"
"மிருது! [நிலா] வா தலை பின்னி விடறேன்'
'மிருது! [நிலா] போய்க் குளி'
"மிருது [நிலா]சாப்பிட வா"
"மிருது! [நிலா] கொஞ்ச நேரம் தொந்தரவு பண்ணாதே"
'மிருது! [நிலா] நேரமாச்சு. போய்த் தூங்கு"
அய்யோ! இதை எல்லாவற்றையும் நானும் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வயதாகிக் கொண்டு வருகிறதா என்ன????
அப்பப்பா ...! நல்ல வேளை , இந்தத் தொல்லைக்கு நடுவில் ஒருநாள் அவளுக்கு கொரூச்சகா [ கதாஸ்] கிடைத்தான் :).
"மெட்ராஸி-ல் மிருது யார் இந்த கொரூச்சகா?" படிக்கப் படிக்க உங்களுக்கு உங்களின் குழந்தைகளின் செயல்கள் படம் போல விரியும்.
அவர்களின் விளையாட்டு நண்பனைக் நீங்களும் சந்தித்து, அவர்கள் பெரியவர்களானதும் நினைவுகளை மீட்டுக் கொடுங்கள்.
பின்குறிப்பு:
"மெட்ராஸி-ல் மிருது யார் இந்த கொரூச்சகா?" -
தமிழாக்கம் : பிரேமா ஸ்ரீனிவாசன், வஸந்தா சூரியா
காலச்சுவடு பதிப்பகம் . விலை ரூ ; 80
Thursday, January 10, 2013
புத்தகக் கண்காட்சி- புத்தக லிஸ்ட்
எனக்கு எப்பவுமே ஊருக்கு செல்வதைக் காட்டிலும், செல்வதற்குரிய ஆயத்தங்களை செய்வதிலும் ஆர்வம் அதிகம். முதல் முறையாக சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடிவெடுத்த உடனேயே 15 நாட்களாக, ராப்பகலாக உட்கார்ந்து நான் தயாரித்துக்கொண்டு வரும் புத்தக லிஸ்ட்.
பார்க்க வேண்டிய பதிப்பகங்கள்
----------------------------------------
அல்லயன்ஸ் பதிப்பகம் 370
நே ஷனல் பப்ளி கே ஷன்ஸ்
வானதி பதிப்பகம் 471,495
பழனியப்பா பிரதர்ஸ் 488
மணிமேகலை பிரசுரம்- அப்பு சாமி காமிக்ஸ் 244
இன்போமேப்ஸ் 106
நே ஷனல் புக் ட்ரஸ்ட் 253
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 367
அமர் சித்ர கதா
டிஸ்கவரி புக் பேலஸ் - 43
விடியல் - 516
லயன் முத்து காமிக்ஸ் - 343
நர்மதா - 103
தமிழ் புத்தகாலயம் -
- வாண்டுமாமா புத்தகங்கள் -பல
- ஹோமரின் இலியத் கிரேக்க புராணக்கதைகள். - வானதி
- அழிந்த உலகம் - (முக்கியமாக கண்ணனுக்கு) - டையனோசர் பற்றி
- எறும்பு குடும்பத்தின் கதை - வானதி
- சந்திரனே சாட்சி - வானதி
- தியோடர் பாஸ்கரன் - தாமரை பூத்த தடாகம்
- இன்னும் பிறக்காத தலைமுறைக்கான தியோடர் பாஸ்கரன்( நர்மதா)
- கானுறை வேங்கை , இயற்கை பராமரிப்பும் வரலாறும் தியோடர் பாஸ்கரன்( நர்மதா)
- மோகமுள் – தி. ஜானகிராமன்
- தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
- இளைஞகர்களுக்கான புத்தர் – NBTஎஸ்.பட்டாச்சாரிய – NBT
- ஆலவாய், மதராச பட்டினம் - நரசய்யா
- ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் - காவ்யா, சண்முகசுந்தரம்
- வாழ்வின் சில உன்னதங்கள் - விட்டல் ராவ் - நர்மதா பதிப்பகம்
- கம்பர் தரும் ராமாயணம் (1,2,3) - டி.கே.சிதம்பரநாத முதலியார் - திருவரசு புத்தக நிலையம்
- ராகுல சாங்க்ரித்யாயன் – வோல்காவிலிருந்து கங்கை வரை - தமிழ் புத்தகாலயம்
- டைட்டானிக்கும் டி.கே.சி.,யும். பூவண்ணன் , திருமலா பப்ளி கே ஷன்ஸ்
- கடகடா குடுகுடு - ஜீவாரகுநாத்
- மல்லி - ஜீவா ரகுநாத்
- லயன் முத்து காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி (கிடைக்குமா)
- லக்கி லூக் - லயன் காமிக்ஸ்
- யுவான் சுவாங் - இந்தியப்பயணம்
- சித்திரக்கதைகள் - நி -ராத்லோவ் - நியூ செஞுரி புக்ஹவுஸ்-ராதுகா
- ஈரான் 1& 2 - விடியல் பதிப்பகம்
- புலிநகக்கொன்றை
பார்க்க வேண்டிய பதிப்பகங்கள்
----------------------------------------
அல்லயன்ஸ் பதிப்பகம் 370
நே ஷனல் பப்ளி கே ஷன்ஸ்
வானதி பதிப்பகம் 471,495
பழனியப்பா பிரதர்ஸ் 488
மணிமேகலை பிரசுரம்- அப்பு சாமி காமிக்ஸ் 244
இன்போமேப்ஸ் 106
நே ஷனல் புக் ட்ரஸ்ட் 253
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 367
அமர் சித்ர கதா
டிஸ்கவரி புக் பேலஸ் - 43
விடியல் - 516
லயன் முத்து காமிக்ஸ் - 343
நர்மதா - 103
தமிழ் புத்தகாலயம் -
Subscribe to:
Comments (Atom)


