வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் அம்மாக்களுக்கு இருக்கும் தலைவலிகளை விடப் பெரிய தலைவலி "டப்பாவில் இன்று என்ன தருவது?". தற்பொதெல்லாம் டப்பாக்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து இரண்டு, மூன்றாகிவிட்டது. அதுவும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குழந்தைகள் இருந்தால் திண்டாட்டம் தான். இருவருக்கும் பிடித்தது என்று ஏதோ செய்வதற்குள் இன்னொரு தடவை நாமே படித்து முடித்து விடலாம். இன்று காலை வேறே ஒன்றுமெ செய்வதற்கு நேரம் இல்லாமையால் மாவை வைத்து பணியாரம் செய்து ஒப்பேற்றலாம் என்று செய்தபோது என் பெண் அதை ஒரு உணவாகவே மதிக்காததால் தொட்டுக்கொள்ள சாம்பார் என்று ஆசை காட்டி ஒரு தக்காளி கருவேப்பிலை உப்பு,கொஞ்சம் வெந்தயப்போடி,பெருங்காயப்பொடி போட்டு கொதிக்க வைத்துக் கொடுத்தனுப்பினேன். அனுப்பியது போக கொஞ்சம் நான் சாம்பார் என்று செய்தது கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியது.
அப்புறம் நான் சாப்பிட என்று என்ன செய்யலாம் என்று யோசித்ததில் மாவுடன் மீதமானவற்றைக் கலந்து கொத்தமல்லி ,ஒரு வெங்காயம் நறுக்கிப் போட்டு பணிகாரக் கல்லில் ஊற்றியதில் கொஞ்ச நேரத்தில் வெறும் பணிகாரம் மசாலா பணிகாரமாக ஜொலித்தது.
சில முக்கிய குறிப்புகள்
- வீட்டில் குழந்தைகள் வசதி இல்லாதவர்கள் (:))மாவில் கலக்குவதற்க்கு தேவையானவற்றை முன்பே தயாரித்துக் கொள்ளவும்.
- 2 நடுத்தரமான பழுத்த தக்காளி ரநறுக்கியது , சிறிது கருவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத் தூள்,மஞ்சள் தூள். பச்சை மிளகாய் 1 (சிறிதாக நறுக்கியது)
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்துக் கொண்டு மேலே கூறியவற்றைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். தக்காளி வெந்தவுடன் அணைத்துவிடலாம்.
- இது தவிர செய்யும் சமயம் வீட்டில் மீதமாக இருக்கும் எந்த வேகவைத்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- வெங்காயத்தையும், கொத்தமல்லி இலையையும் சிறிதாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.
- அடுப்பில் பணிகாரக் கல்லைப் போட்டபின் மாவுடன் பொருட்களைக் கலக்குவதற்குத் தொடங்குங்கள். மாவு தயாராகும் போது கல் தேவையான அளவு சூடாக இருக்கும்.
- முதலில் எல்லாக் குழிகளிலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அப்புறம் மாவினை குழிகளுக்குச் சற்று உள்ளடங்கி இருக்கும் வரை மட்டும் ஊற்றவும்.
- சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு மெல்லிய ஸ்பூனால் பணிகாரம் வெந்தவுடன் , ஸ்பூனை தண்ணீரில் முக்கிவிட்டுத் திருப்பவும்.
- முதலில் பணிகாரம் சரியாக வராவிட்டாலும் பரவாயில்லை, திருப்பவும் எல்லாக் குழிகளிலும் எண்ணை விட்டு மாவை ஊற்றி அடுப்பை சிம்மில் வத்து விட்டு பணிகாரம் சாப்பிட ஆரம்பிக்கவும். நாம் சாப்பிட்டு முடிக்கும் சமயம் அடுப்பில் ஊற்றியது சரியான பதத்தில் இருக்கும். அப்படியே திருப்பி விடவும். :)
- "பணிகாரம்" வார்த்தை என் பெண் கண்டு பிடித்தது. இதையே குழந்தைகளுக்கு காரம் தவிர்த்து செய்து கொடுக்கலாம்.
- 'என்ன? தொட்டுக் கொள்ளவா? நானே ஏதோ உல்டா செய்து பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன். இதுல தொட்டுக்க வேறையா?" :)
- தக்காளி சாஸ், சட்னி நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். செய்து பார்த்தவர்கள் கமெண்ட்டவும்.
No comments:
Post a Comment