மாரட்பல்லி food bazaar-ல் Sach Brand ஐட்டங்கள் ஏகப்பட்டது கொட்டி வைத்திருக்கிறார்கள். பேஸ்ட், பிரஷ் இத்தியாதிகள். அறிமுகச்சலுகை விலை என்பதால் நானும் ரெண்டு மூணு பொருள்கள் வாங்கி வைத்திருக்கிறேன். பிரஷ் ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை. கல்லு மாதிரி இருக்கிறது. முதல் நாள் தேய்த்துவிட்டு நொந்து போய்விட்டேன். ஒருவேளை காலியாகப்போகும் ரீபில் பேனா கடைசியில் நம் கையில் பழகியிருப்பதைப் போல கடைசியில் தான் அட்டகாசமாக இருக்குமா?. அப்படி இருந்தால் நினைப்பாக சீப்புத் தேய்க்க எடுத்து வைத்துவிட வேண்டும்.
Mixed Fruit Juice எனக்கும் நிலாக்குட்டிக்கும் பிடித்திருந்தது. நிலா குட்டி அதனுடன் இலவச இணைப்பாக வந்த பெட் பாட்டிலுடன் ஒரு நாள் முழுக்கச் சுற்றினாள். அப்புறம் பாட்டில் மூடி இரண்டும் நிலாக்குட்டியிடம் சண்டை போட்டுக் கொண்டு எங்கேயொ போய்விட்டன தனித்தனியாக. என்று வீட்டில் எல்லாம் ஜோடியாக இருந்தன இப்போது இருப்பதற்கு? :). இன்று பேஸ்ட்க்கு திறப்பு விழா. சுமாராக இருந்தது. ஏன் நாம் எப்போதும் புது brand முன்புள்ளவற்றிலிருந்து முற்றும் விலகி இருக்க வேண்டுமென்று முதலில் எதிர் பார்க்கிறோம்?. ஒருவேளை சச்சினே விளம்பரத்தில் இந்த பிரஷ் எடுத்து, இதே பேஸ்ட்டைப் போட்டு பல் தேய்த்து விட்டு, இந்த ஜுஸ் குடித்து விட்டு சென்றதனால் தான் என்னால் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆட முடிந்தது என்று சொன்னால், அடுத்த உலகக்கோப்பை வரைக்கும் இந்த brand தாக்குப்ப்பிடிக்கலாம்.

'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்..'னு வள்ளுவர் பிராண்டுகளும் விளம்பரங்களும் வர்றதுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிட்டார்.
ReplyDelete