நான் ஐஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் போது எங்க வீட்டுக்கு பக்கத்துல கடலை விதைக்கறதுக்காக விதைக்கடலய தோல் உடைக்கறத்துக்கு காசு குடுப்பாங்க. ஒரு வள்ளத்துக்கு(4 படி) நாப்பது காசு. நானும் கொஞ்ச நாள் பக்கத்து வீட்டு அக்காங்களோட போய் அவங்களுக்கு உடச்சு குடுக்கற சாக்குல கொஞ்சம் வாயில போட்டுட்டும் வருவேன். அவங்களும் நல்லா பிளான் செஞ்சு நம்மளையும் அவங்களுக்காக உடைக்க வச்சுருவாங்க. பெரியவங்க எல்லம் டக டகன்னு உடச்சுருவாங்க. எனக்கு தான் பொன்னான கைகளாச்சே. (வீட்டுல செல்ல கடகுட்டி பொண்ணாக்கும் நானு). தரைல டொக்குன்னு தட்டி ரெண்டா பிக்க வராது. கோணமாணலாத்தான் வரும். அதுவும் கொஞ்சம் உடைக்கறதுக்குள்ள கை வலிக்க ஆரம்பிச்சுடும். விட்டுட்டு போயிருவேன். ரதின்னு ஒரு அக்கா ரெண்ணு கைல, வாயில கடிச்சுன்னு என்ன வேகமா ஒடைப்பாங்க. இப்படியே சூப்பர் பாஸ்டா ஒடைச்சு ஒரு நாளைக்கு 2 ரூவா வரைக்கும் வாங்கீட்டு நடைய கட்டுவாங்க. அப்புறம் தான் மர மண்டைக்கு தோணுச்சு. ஏன் நாமளே தனிய உடைக்க கூடாதுன்னு. முதல்ல ஒரு வள்ளம் வாங்கி பாதி உடைச்சேன். அப்புறம் அதை விட்டுட்டு அடுத்த நாள் போய்ப் பார்த்தா நான் வரமாட்டேன்னு வேற ஒருத்தருக்கு கொடுத்து அவங்க முடிச்சு காச வாங்கீட்டு போய்ட்டாங்க. திருப்பியும் ஒரு வள்ளம் வாங்கி மணிக்கணக்கா உக்கார்ந்து உடச்சுட்டு முழுசா நாப்பது காசு வாங்கீட்டேன்ல நானு :). ரதியக்கா தான் என்ன வேலை செய்ய தூண்டுன புண்ணியவதியோன்னு இப்பொ தோணுது. :)
அப்புறம் ரெண்டாந்தடவை 2 படியோ என்னமோ உடைச்சு திரும்பியும் காசு வாங்கினதா நினைவு.இப்படி செய்யறேன்னு வீடுல சொல்லல. கைல மொத சம்பளம்(?) வாங்கினப்பறம் ஒரே ஓட்டம் தான் வீட்டுக்கு. அப்பாகிட்ட நானே சம்பாதிச்சதுன்னு ரொம்ம்ப பெருமையா நீட்னேன். அப்பா என்ன சொன்னாரோ எனக்கு எல்லாம் நெனைப்பில்ல.ஆனா அந்த காசை செலவு பண்ணக்கூடாது வீட்டுக்கு ரக்ஷைன்னு சொல்லி உடனே மஞ்சள் துணில முடிஞ்சு சாமி பக்கத்துல வச்சு பீரோல வச்சுட்டார்.
அது இன்னமும் எங்க அம்மா கல்யாணத்துக்கு பரிசா வந்த சோப்பு பவுடர் வச்சுக்கற டப்பாவுல, தாத்தாவோட கிரிமென்ஸ் கோட் பட்டன், பாட்டி கைல கடைசியா குடுத்து வாங்கின காசு, வரலக்ஷ்மி பூஜை பிரசாதம் மற்றும் பல பொக்கிஷங்களுக்கு இடைல பத்திரமா இருக்கு.
No comments:
Post a Comment