வணக்கம்.
சில வருடங்களாகவே எல்லா தமிழ் வலைப் பூக்களை தேடித் தேடி படிச்சிகிட்டு இருந்தாலும், சொந்தமா ஒரு பக்கம் ஆரம்பிக்க தயக்கமாவே இருந்தது. வலையுலகுல நீ, நான் ன்னு எல்லாரும் வரிஞ்சு வரிஞ்சு சுவாரஸ்யங்களான விஷயங்களா எழுதும்போது, நான் என்னாத்தன்ன எழுதறது? ஆனது ஆகட்டும்-னு தில்லா இன்னிக்கு நானும் ஆரம்பிச்சுட்டேன். முதல் இடுகை யாருக்காவது பயனுள்ளதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
புரத ஒழுக்கு நோய் | Nephrotic Syndrome
கைகுழந்தைகளுக்கு காய்ச்சல், சளின்னாலே புது பெற்றோருக்கு பயம் வந்திடும். டாக்டர் குடுக்கற அட்வைஸுக்கு மேல பக்கத்துல, சுத்தி, அப்புறம் வீட்டுல இருக்கற பெரியவங்கன்னு எல்லாரும் மாத்தி மாத்தி வைத்தியம் சொல்லி நம்மளுக்கு பைத்தியம் பிடிக்க வச்சுருவாங்க.
நெப்ரோடிக் சிண்ட்ரோம் அதாவது புரத ஒழுக்கு நோய், அதிக அளவில் பரவலாக அறியப்படாத ஆனால் பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கும் நோயாகும்.
ஒண்ணரை வயதுல இருந்து 5 வயது வரையான குழந்தைகள் இதுனால பாதிக்கப்படறாங்க. இது ஒரு சிறுநீரகம் தொடர்புடைய நோய்.
அறிகுறிகள்கீழ்க்கண்ட அறிகுறிகள், குழந்தைகளிடம் தென்பட்டால் உடனே குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் செல்லுங்கள்:
- தூங்கி எழும் போது கண் இரப்பைகள் வீங்கி காணப்படும். பகலில் கண்ணைச் சுற்றி உள்ள வீக்கம் படிப்படியாக வடிந்து உடம்பில் அல்லது காலில் வீக்கம் (edema) காணப்படும்.
- கவனிக்கும் படியாக குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.
- மிக சிறிய அளவில் சிறுநீர் வெளியேறுதல் (less frequent urination) / சிறுநீர் மஞ்சளாக அடர்த்தியாக வருதல்/சிறுநீர் வெளியேறாமை.
- காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் தென்பட்டால் இதன் தீவிரம் அதிகமாகும்.
குழந்தைகளுக்கு எப்பொழுதாவது கண்களில் அல்லது எந்தப் பகுதிலாவது வேறுபாடான வீக்கம் தென்பட்டால், "குழந்தை தூங்கி எழுந்தா இப்படி தான் வீங்கும்" அல்லது "உடம்பு சூடு" போன்ற இலவச அறிவுரைகளிலிருந்து பிய்த்துக் கொண்டு pediatrician-னிடம் ஓடுங்கள். இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே Pediatric Nephrology-ல் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.
ஒருமுறை கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் கூட, மறுபடி பலமுறை இது திரும்பி வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு (relapse). அதனால் வீட்டிலேயே கண்டறியக்கூடிய Protein Sticks-ஐக் கொண்டு வாரம் இருமுறையாவது சிறுநீர் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.
சிறப்பா எழுதி இருக்கீங்க. படிக்க எளிமையா இருக்கு. இன்னமும் தொடர்ந்து எழுதுங்க.
ReplyDeleteபெரிய வலைப்பூவா எழுதாம ரெண்டு பத்திக்குள்ள முடிச்சா ஆரம்ப ஆர்வம் மழுங்காம நிறைய எழுத வாய்ப்பு இருக்கு.
இதற்கான சிகிசை றைகள் மற்றும் உணவு றைகள்
ReplyDeleteஇதற்கான சிகிசை றைகள் மற்றும் உணவு றைகள்
ReplyDelete