கர்னாடக சங்கீதத்தை பொறுத்த வரை எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு ராகங்களும் கேள்வி ஞானம் தான். விவரம் அறியாத வயசில் இருந்து எனக்கு குரு என் அப்பா தான். அவரும் இதை முறையாக கற்றிருக்கவில்லை. ஆனாலும் அவரால் அந்த சங்கீதத்தை உள்வாங்க முடிந்தது. முதன்முதலாக எனக்கு ராகம் என்ற சொல்லுக்கு மோகனம் என்று மட்டுமே அறிந்திருந்தேன். அதற்க்கப்புறம் ஹம்ச்த்வனி, காம்போதி இவை பரிச்சயமாயின.
நானாக தேடி கற்கும் ஆவலில் பல பாடல்களை பல்வேறு ராகங்களை கேட்க முற்பட்டாலும், சில ராகங்களைத் தவிர மற்றவற்றை மனதில் பதிய வைக்க சிரமமாக இருக்கிறது.ஆனால் சில ராகங்கள் மட்டும் முதல் சமயத்திலேயே மனதில் பாய் விரித்து அமர்ந்து கொள்கின்றன. புதுப்புது பாடல்களைக் முதன் முறையாக கேட்கும் போதும் என்னைக் கவர்ந்தவை பெரும்பாலும் மோகனம், ஹம்சத்வனி, காம்போதி, ஆபேரி, கர்னாடக தேவகாந்தாரி இந்த ராகங்களிலேயே அமைந்து விடுகின்றன.ஆபேரியும் கர்னாடக தேவகாந்தாரியும் ஒன்றா?
என்னால் ஒரு சில ராகங்களை மட்டுமே உணர முடிகிறது. இந்த ராகங்களுக்கு இடையே எதாவது தொடர்பு உண்டா?. ஒருவரின் இயல்புக்கு(nature) ஏற்பத்தான் ராக விருப்பங்களா?
No comments:
Post a Comment